6 வருடத்திற்குப் பிறகு குவாங்சூ- டெல்லி இடையே விமான சேவையை தொடங்கும் சீன நிறுவனம்

இந்திய பிரதமர் மோடி- சீனா அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பால் படிப்படியாக விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டு வருகிறது.
China Southern Airlines
Published on

சீனாவின் China Southern Airlines நிறுவனம், இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு சீனாவின் குவாங்சூவில் இருந்து விமானப் போக்குவரத்து வருகிற 21-ந்தேதியில் இருந்து தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

வாரத்திற்கு 100 விமானங்கள்

China Southern Airlines நிறுவனத்தின் தலைமையகம் சீனாவின் தெற்கு குவாங்டோங் பிராந்தியத்தின் குவாங்சூவில் உள்ளது. சீனாவில் உள்ள முக்கியமான விமான சேவை நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இருவழிப் பாதையில் வாரத்திற்கு 100 விமானங்கள் இயக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இன்று பிரிக்ஸ் மாநாடு தொடங்க இருக்கிறது. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனாவில் தடைபட்டு விமான சேவை

கடந்த 6 வருடத்திற்கு முன்னதாக கொரோனா தொற்று காரணமாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பின் எல்லையில் மோதல் ஏற்பட்டு பதற்றம் நிலவியதால் விமான சேவை தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்தது.

மோடி- ஜி ஜின்பிங் சந்திப்பால் மீண்டும் தொடங்கப்பட்ட விமான சேவை

இந்திய பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் கடந்த 2024 மற்றும் 2025-ம் ஆண்டு நேரடியாக சந்தித்து பேசினார். அதனடிப்படையில் படிப்படியாக இருநாடுகளுக்கு இடையிலான விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டு வருகிறது.

கடந்த மார்ச் மாதம் இண்டிகோ நிறுவுனம் ஷாங்காய்- கொல்கத்தா இடையே தினசரி விமான சேவையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com