

முதல்- மந்திரி தனது கடையில் மிக்சர் வாங்கி சாப்பிட்டதும் மகிழ்ந்த அவர் சந்திரபாபு நாயுடுவுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அந்த பெண்ணிடம் உரையாடிய சந்திரபாபு நாயுடு அவரது குடும்ப வருமானம், குடும்பம் பற்றி கேட்டார். அப்போது அந்தப் பெண் தனியாக வாழ்ந்து உழைத்து பிழைப்பு நடத்தி வருவதாக தெரிவித்தார்.
அதிர்ஷ்டம் யாருக்கு, எப்போது தேடி வரும் என்று சொல்ல முடியாது. அப்படி தான் ஆந்திராவின் விசாகப்பட்டினம் ஆர்.கே. கடற்கரையில் முரிமிக்சர், மாங்காய் விற்ற பெண்ணுக்கும் அதிர்ஷ்டம் தேடி வந்துள்ளது.
அந்த கடற்கரையில் பல ஆண்டுகளாக தற்காலிக கடை நடத்தி வரும் அந்த பெண்மணி வழக்கம் போல் நேற்றும் கடை நடத்தினார்.
அந்த கடற்கரையில் சுவர்ண ஆந்திரா- ஸ்வச்ச ஆந்திரா என்ற கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. கடலில் கலக்கும் பிளாஸ்டிக், கடல் அடியில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் மற்றும் மீன்பிடி வலைகள் உள்ளிட்டவை அகற்றப்பட உள்ளது. 1200 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்ற திட்டமிடப்பட்டு உள்ளனர்.
பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மீனவர்களுக்கு உடனடியாக அதை டிஜிட்டல் மூலம் எடை போட்டு ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது. இது மீனவர்களுக்கு கூடுதல் வருமானம் ஈட்டவும் உதவுகிறது. இந்த பணிகளை ஆய்வு செய்ய முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு ஆர்.கே. கடற்கரைக்குச் சென்றார்.
கடல் மணலில் நடந்த படியே அந்த பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கடற்கரையில் முரிமிக்சர் விற்றுக் கொண்டிருந்த அந்தப் பெண் மணி அவரது கண்ணில் பட்டார். அவரிடம் சென்று முரிமிக்சரை வாங்கி சுவைத்தார். முதல்- மந்திரி தனது கடையில் மிக்சர் வாங்கி சாப்பிட்டதும் மகிழ்ந்த அவர் சந்திரபாபு நாயுடுவுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அந்த பெண்ணிடம் உரையாடிய சந்திரபாபு நாயுடு அவரது குடும்ப வருமானம், குடும்பம் பற்றி கேட்டார். அப்போது அந்தப் பெண் தனியாக வாழ்ந்து உழைத்து பிழைப்பு நடத்தி வருவதாக தெரிவித்தார்.
அதைக் கேட்ட சந்திரபாபு நாயுடு உடனடியாக அந்த பெண்ணிற்கு அரசின் ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.