

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கிய அனைத்து ஏவுகணை அமைப்புகளின் தயாரிப்பு தொழில்நுட்பங்களையும் உள்நாட்டு தனியார் நிறுவனங்களுக்கு வழங்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
உள்நாட்டு உற்பத்தித் திறன்களை மேம்படுத்துதல், இறக்குமதியைச் சார்ந்திருப்பதை குறைத்தல், உள்நாட்டு மதிப்புக் கூட்டலை அதிகரித்தல், பாதுகாப்புத் துறைச் சார்ந்த தொழில்துறை அடித்தளத்தை வலுப்படுத்துதல்,
விநியோக முறையில் இந்திய குறு, சிறு, நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள், இதர தொழில்நுட்பக் கூட்டாளர்களின் பங்களிப்பிற்கான வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவைகள் இதன் முக்கிய நோக்கம் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தத் தொழில்நுட்பப் பரிமாற்றம், தகுதியான உள்நாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான சான்றிதழ்கள், தகுதித் தேர்வுகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.