கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு - சிஐடிக்கு மாற்றம்!

தமிழ்நாடு வந்த கர்நாடக முதலமைச்சரிடம், முதலமைச்சர் விஜய் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தாரா? என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் கேள்வி.
கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு - சிஐடிக்கு மாற்றம்!
Published on

கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை, விரிவான விசாரணைக்காக குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி, கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் காவேரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில் அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகிய 3 தமிழர்கள் கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இவர்கள் மான் வேட்டையில் ஈடுபட்டதாகவும், தற்காப்புக்காகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் கர்நாடக வனத்துறை தெரிவித்தது.

ஆனால் இன்று வெளியான மூவரின் பிரேத பரிசோதனை அறிக்கையிலும் அவர்களின் விலா எலும்புகள் உடைக்கப்பட்டு, கொடூரமான காயங்களுடன் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.

மேலும் மூன்று பேரும் அருகருகே வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. இதனை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் சட்டமன்றத்தில் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் உள்ள தீவிரத்தன்மையை உணர்ந்து, கர்நாடக காவல்துறை விசாரித்து வந்த இந்த வழக்கு, தற்போது சிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com