ஜந்தர் மந்தரில் அத்துமீறி நுழைந்த வழக்கு: சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்காவுக்கு பிணை வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

சுமார் 7 நாட்கள் நீதிமன்றக் காவலில் இருந்த பிறகு, இருவரும் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஜந்தர் மந்தரில் அத்துமீறி நுழைந்த வழக்கு: சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்காவுக்கு பிணை வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவு!
Published on: 

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அத்துமீறி நுழைந்ததற்காக கைது செய்யப்பட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிர்வாகிகள் சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா ஆகியோருக்கு பிணை வழங்கி டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது பின்னணி

வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு (SIR) எதிரான போராட்டங்களின் போது, ​​ போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்த ஜந்தர் மந்திர் பகுதியில் ​​பாதுகாப்பை மீறி நுழைந்ததற்காக அக்.13ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது அத்துமீறி நுழைதல், தடை உத்தரவை மீறுதல், அமைதி ஒப்பந்தத்தை மீறுதல் மற்றும் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இருவரும் கைது செய்யப்பட்டு ஐந்து நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட நிலையில், அக்.19 அன்று மேலும் இரண்டு நாட்கள் காவல் நீட்டிக்கப்பட்டது. இந்த காவல் நீட்டிப்பை எதிர்த்து இருவரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுத்ததைத் தொடர்ந்து, மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகை வரை, கரப்பான்பூச்சி கட்சியால் எந்தப் போராட்டமும் முன்னெடுக்கப்படாது என்பதை சுட்டிக் காட்டிய நிலையில், டெல்லி சிறப்பு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. சுமார் 7 நாட்கள் நீதிமன்றக் காவலில் இருந்த நிலையில் இருவரும் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com