ஆனந்த் அம்பானி திருமணத்தில் பாட்டு பாட ரூ.25 கோடி வாங்கும் பிரபல பாடகர்

திருமணத்தையொட்டி நேற்று முன்தினம் முதலே மும்பைக்கு உலக பிரபலங்கள் முதல் உள்ளூர் திரை நட்சத்திரங்கள் வரை அனைவரும் வரத்தொடங்கினர். வரும் திங்கள் வரை நடைபெறும் திருமண கொண்டாட்டத்தில் அரசியல் தலைவர்கள், பிரபல தொழில் அதிபர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
ஆனந்த் அம்பானி திருமணத்தில் பாட்டு பாட ரூ.25 கோடி வாங்கும் பிரபல பாடகர்
Published on

உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழில் அதிபருமான முகேஷ் அம்பானி - நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் மருந்தக துறையை சேர்ந்த பிரபல தொழில்அதிபர் வீரேன் - ஷைலா மெர்ச்சன்ட் தம்பதியின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்-க்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்களின் திருமணத்துக்கு முந்தைய வைபவங்களும், கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது. கடந்த மார்ச் மாதம் குஜராத் ஜாம்நகரில் நடந்த கொண்டாட்டத்தில் உலகம் முழுவதும் இருந்து பிரபலங்கள், தொழில் அதிபர்கள், ஹாலிவுட் திரை நட்சரத்திரங்கள் மற்றும் இந்தியாவின் அனைத்து முன்னணி திரை நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள், தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில் நேற்று மும்பை பி.கே.சி.யில் உள்ள அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான ஜியோ வேர்ல்டு டிரைவ் கன்வென்சன் அரங்கில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடந்தது. திருமணத்தையொட்டி நேற்று முன்தினம் முதலே மும்பைக்கு உலக பிரபலங்கள் முதல் உள்ளூர் திரை நட்சத்திரங்கள் வரை அனைவரும் வரத்தொடங்கினர். வரும் திங்கள் வரை நடைபெறும் திருமண கொண்டாட்டத்தில் அரசியல் தலைவர்கள், பிரபல தொழில் அதிபர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இதற்கிடையே ஆனந்த் அம்பானியின் திருமண செலவு ரூ.4000 முதல் ரூ.5000 கோடி வரை என்ற தகவல் வெளியாகி பொதுமக்களிடையே பேச்சு பொருளாகி உள்ளது.

இந்நிலையில், மும்பையில் நடைபெற்று வரும் நட்சத்திரங்கள் நிறைந்த திருமண கொண்டாட்டத்தில் நைஜீரிய இசைக்கலைஞரும், ராப் பாடகருமான ரேமா பாடல் நிகழ்ச்சிக்கு $3 மில்லியன், அதாவது இந்திய மதிப்பில் ரூ.25 கோடிக்கு மேல் பெறுகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நைஜீரிய ராப் பாடகருமான ரேமா, 'காம் டவுன்' பாடலுக்குப் பெயர் பெற்றவர். இவர் திருமணத்தில் 'காம் டவுன்' பாடலை மட்டுமே பாடுவார் என்று கூறப்படுகிறது. ரேமாவைத் தவிர, 'டெஸ்பாசிட்டோ' புகழ் லூயிஸ் ஃபோன்சியும் இந்த நிகழ்வில் நிகழ்ச்சி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com