ரெயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

78 நாட்களுக்கான ஊதியத்தை தீபாவளி போனசாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அறிவிப்பு ரெயில்வே போலீசார், ரெயில்வே சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு பொருந்தாது
ரெயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு
Published on

புதுடெல்லி:

ரெயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பின்போது அறிவித்தார்.

மொத்தம் ரூ.1,832 கோடி போனஸ் வழங்கப்படும் என்றும், இதன்மூலம் 11.27 லட்சம் ரெயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ரெயில்வே போலீஸ், ரெயில்வே பாதுகாப்பு சிறப்பு படையினர் தவிர்த்து, அரசிதழ் பதிவு பெறாத ரெயில்வே ஊழியர்களுக்கு இந்த போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான ரெயில்வே ஊழியருக்கு அதிகபட்சமாக ரூ.17,951 போனஸ் கிடைக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com