என் மலர்
இந்தியா

17 ஆண்டுகளுக்குப் பிறகு காலாண்டு வருவாயில் லாபம் ஈட்டிய BSNL நிறுவனம்
- கடைசியாக 2007 ஆம் ஆண்டு BSNL காலாண்டு லாபத்தை ஈட்டியது.
- BSNL சந்தாதாரர் எண்ணிக்கையும் டிசம்பரில் சுமார் 9 கோடியாக உயர்ந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ( அக்டோபர் முதல் டிசம்பர் வரை) ரூ.262 கோடி நிகர லாபமாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்க்கு கிடைத்துள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு காலாண்டு வருவாயில் இந்நிறுவனத்தால் லாபம் ஈட்டப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர், "கடைசியாக 2007 ஆம் ஆண்டு BSNL காலாண்டு லாபத்தை ஈட்டியிருந்தது. கடந்தாண்டு ஜூன் மாதத்தில் 8.4 கோடியாக இருந்த சந்தாதாரர் எண்ணிக்கையும் டிசம்பரில் சுமார் 9 கோடியாக உயர்ந்துள்ளது" என்று தெரிவித்தார்.
கடந்த நிதியாண்டின் 3ம் காலாண்டை ஒப்பிடும் போது, BSNL செல்போன் சேவை வருவாய் 15%, பைபர் இணையசேவை வருவாய் 18%, தொலைத்தொடர்பு கம்பி வழித்தட குத்தகை வருவாய் 14% அதிகரித்துள்ளன
மேலும், BSNL அதன் நிதிச் செலவு மற்றும் ஒட்டுமொத்த செலவினங்களை குறைத்துள்ளது. இதனால் கடந்த ஆண்டை விட ரூ.1,800 கோடிக்கு மேல் நட்டம் குறைந்துள்ளன.






