மனைவியுடன் இன்று இந்தியா வரும் பிரிட்டன் இளவரசர் - பிரதமர் மோடியை சந்திக்க திட்டம்

ஜூலை மாதம் இந்தியா - பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்தது
பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன்
Published on: 
Summary

பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் ஆகியோர் இன்று (நவம்பர் 16) இந்தியா வருகை தருகின்றனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக மூன்று நாள் பயணமாக பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் இந்தியா வருகை தருகின்றனர்.

வரும் 18ஆம் தேதி வரை அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.

மும்பை விஜயம்

​இந்தப் பயணத்தின் போது, மும்பையில் பாலிவுட் திரையுலகினரை சந்திக்கின்றனர்.

மும்பையில் மெட்ரோ ரெயிலில் பயணம், கல்லி கிரிக்கெட் விளையாட்டில் பங்கேற்பது உள்ளிட்ட திட்டங்களை இளவரசர் வில்லியம் வைத்துள்ளார்.

இளவரசி கேட் மிடில்டன் அங்குள்ள மருத்துவமனை ஒன்றிற்கு நேரில் சென்று பார்வையிட உள்ளார்.

பிரதமருடன் சந்திப்பு

​2 நாட்கள் மும்பை பயண நிறைவடைந்த பின், வரும் 18ஆம் தேதி டெல்லி செல்லும் தம்பதி, ஆசியான் மாநாட்டை முடித்துவிட்டு நாடு திரும்பும். இதனிடையே அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச உள்ளனர்.

இந்தச் சந்திப்பின் போது, இந்தியா - பிரிட்டன் இடையேயான வர்த்தகம், பசுமை எரிசக்தி, தொழில்நுட்பம், கல்வி மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் என ​இந்தியாவுக்கான பிரிட்டன் தற்காலிக உயர் கமிஷனர் பென் மில்லர் தெரிவித்தார்.

​கடந்த ஜூலை மாதம் இந்தியா - பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

X