அரியானாவில் அதிர்ச்சி சம்பவம்: பள்ளியில் சிறுமியை கற்கள்-பூந்தொட்டியால் தாக்கிய 3-ம் வகுப்பு மாணவன்

சிறுமி மேல் சிகிச்சைக்காக சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அரியானாவில் அதிர்ச்சி சம்பவம்: பள்ளியில் சிறுமியை கற்கள்-பூந்தொட்டியால் தாக்கிய 3-ம் வகுப்பு மாணவன்
Published on: 
Summary

பஞ்ச்குலா பள்ளியில் 3-ம் வகுப்பு மாணவன் எல்.கே.ஜி. சிறுமியை தாக்கியதால் அவளது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரியானாவின் பஞ்ச்குலாவின் செக்டார்-20 பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் எல்.கே.ஜி. படிக்கும் சிறுமியை 3-ம் வகுப்பு மாணவன் சரமாரியாக தாக்கினார். கற்கள், பூந்தொட்டியால் தாக்கியதில் சிறுமி படுகாயம் அடைந்தார்.

கொடூர தாக்குதல்

இந்த சம்பவம் நிகழ்ந்தபோது வகுப்பறையில் யாரும் இல்லை. மாணவன் தாக்குதலில் ஈடுபட்டது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது.

சிறுமி மயக்கமடைந்த பிறகும் தாக்குதலை தொடர்ந்து உள்ளான். மேலும் சிறுமியை சிறிது தூரம் தரையில் இழுத்துச் சென்றுள்ளான். படுகாயம் அடைந்த சிறுமி அரசு மருத்துவமனைக்குகொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. மேல் சிகிச்சைக்காக சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவன் பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X