திருமணத்திற்கு முன்பு உல்லாசம்: காதலன் கொடுத்த கருத்தடை மாத்திரை தின்ற இளம்பெண் பலி

இளம்பெண்ணின் உடல்நிலை மோசமடைந்ததால், அவரது குடும்பத்தினர் அவரை காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு மாற்றினர்.
மரணம்
மரணம்
Published on
Summary

ஐதராபாத் அருகே பணிபுரிந்த இளம்பெண், காதலன் நாகசாயுடன் உறவில் இருந்து கர்ப்பமானார். குடும்பத்துக்கு தெரியாமல் இருக்க அவர் கொடுத்த கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டதால் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நிஜாம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டும் உயிர் பிழைக்க முடியவில்லை. உறவினர்கள் புகாரின் அடிப்படையில் கேபிஹெச்பி போலீசார் நாகசாயை கைது செய்தனர்.

தெலுங்கானா மாநிலம் ராஜமகேந்திரவரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஐதராபாத் அருகே உள்ள ஒரு தனியார் ஆய்வகத்தில் பணிபுரிந்து வந்தார்.

கர்ப்பம்

இவருக்கு கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த நாகசாய் என்பவர் அறிமுகமானார். இருவரும் காதலித்து வந்தனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தனிமையில் சந்தித்தனர். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்தனர். இதனால் இளம்பெண் கர்ப்பமானார். தனது குடும்பத்தினருக்கு தெரிந்தால் பிரச்சனை ஏற்படும் என காதலனிடம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கர்ப்பமான அந்த இளம் பெண்ணுக்கு நாகசாய் கருத்தடை மாத்திரைகளைக் கொடுத்தார். அந்த மாத்திரைகளை உட்கொண்ட பிறகு இளம்பெண் கடுமையாக நோய்வாய்ப்பட்டார்.

உடல்நிலை மோசம்

அவரது நண்பர்கள் அவரை நிஜாம்பேட்டை சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பிறகு, அந்த இளம்பெண்ணின் உடல்நிலை மோசமடைந்ததால், அவரது குடும்பத்தினர் அவரை காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு மாற்றினர்.

அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இளம்பெண் இறந்தார்.

இளம்பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கேபிஹெச்பி போலீசார் நாகசாயை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com