குரங்குகள் விரட்டியதால் ஓடிய சிறுவன் ‘திடீர்’ உயிரிழப்பு

குரங்குகள் கூட்டமாக சிறுவர்களை விரட்ட தொடங்கியது.
குரங்குகள் விரட்டியதால் ஓடிய சிறுவன் ‘திடீர்’ உயிரிழப்பு
Published on: 
Summary

ஆஸ்பத்திரியில் இருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நிஷாந்தை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.

தெலுங்கானா மாநிலம், சூரியபேட்டை மாவட்டம், வல்லபுரத்தை சேர்ந்தவர் வீரபாபு. இவரது மகன் நிஷாந்த் (வயது 12). அதே பகுதியை சேர்ந்தவர் மனேந்தர் (14). 2 சிறுவர்களும் நேற்று கிராமத்தின் புறநகர் பகுதியில் உள்ள குளத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

குரங்குகள்

அங்கிருந்த குரங்குகள் கூட்டமாக சிறுவர்களை விரட்ட தொடங்கியது. குரங்குகள் ஆவேசமாக வருவதை கண்ட 2 சிறுவர்களும் தப்பி ஓடினர்.

அப்போது நிஷாந்த் கால் தடுக்கி கீழே விழுந்தார். திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக இறந்தான். குரங்குகள் நிஷாந்தை சூழ்ந்து கொண்டு கடிக்க முயன்றன.

அரசு ஆஸ்பத்திரி

இதனைக்கண்ட மனேந்தர் கத்தி கூச்சலிட்டார். சத்தத்தை கேட்க குரங்குகள் அங்கிருந்து தப்பி ஓடின. அந்த வழியாக வந்த வாலிபர்கள் நிஷாந்தை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு பைக்கில் அழைத்துச் சென்றனர். ஆஸ்பத்திரியில் டாக்டர் இல்லாததால் கம்மம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆஸ்பத்திரியில் இருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நிஷாந்தை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com