பா.ஜ.க. எம்.பி. வருண்காந்திக்கு கொரோனா பாதிப்பு

பிலிப்பிட்டில் 3 நாட்கள் இருந்த நிலையில், எனக்கு வலுவான அறிகுறிகள் தென்பட்டன. பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதியானது என்று வருண்காந்தி தெரிவித்துள்ளார்.
வருண்காந்தி
வருண்காந்தி
Published on

பிலிப்பிட் :

உத்தரபிரதேச மாநிலம், பிலிப்பிட் தொகுதியில் இருந்து பாராளுமன்ற மக்களவைக்கு பா.ஜ.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர், வருண்காந்தி (வயது 41). இவர் முன்னாள் மத்திய மந்திரி மேனகா காந்தியின் மகனும் ஆவார். இவருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று பாதித்துள்ளது.

இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “பிலிப்பிட்டில் 3 நாட்கள் இருந்த நிலையில், எனக்கு வலுவான அறிகுறிகள் தென்பட்டன. பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதியானது. நாம் இப்போது 3-வது அலை மற்றும் தேர்தல் பிரசாரத்தின் மத்தியில் உள்ளோம். வேட்பாளர்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் தேர்தல் கமிஷன் முன்எச்சரிக்கை டோஸ் தடுப்பூசிகளை போட வேண்டும்” என கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com