டெல்லி சிஜேபி போராட்டத்தில் கலந்துகொண்ட பாஜக தலைவரின் மகள் கைது

சிஜேபி நடத்திய போராட்டங்களில் கலந்துகொள்ள முயன்ற, முன்னாள் முதலமைச்சர்கள் கைது செய்யபட்டனர்.
BJP MLA's Daughter Yashaswinee Raje Singh Arrested
Published on: 
Summary

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், முன்னாள் பாஜக எம்.எல்.ஏ ஒருவரின் மகள் இளைஞர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

டெல்லி ஜந்தரில், தேர்தல் ஆணையம் நடத்தி வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடவடிக்கைக்கு எதிராகவும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரியும் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

போராட்டத்திற்கு அழைப்பு

இந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்க வலியுறுத்தி சிஜேபி கட்சி நேற்று 'டெல்லி சலோ' என்ற பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தது.

மேலும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக அரசியல் கட்சி தலைவர்களும், இளைஞர்களும் டெல்லிக்கு படையெடுத்தனர்.

சிஜேபி அறிவிப்பை தொடர்ந்து, தேசிய தலைநகர் டெல்லியில் 163-வது பிரிவின் கீழ் தடை உத்தரவுகள் அமலில் உள்ளதாகவும், அனுமதியற்ற கூட்டங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தெரிவித்தது.

போலீசார் குவிப்பு

இதையடுத்து டெல்லிக்கு செல்லும் மெட்ரோ ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 40,000 அதிகமான அளவில் டெல்லி காவல்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய ஆயுத காவல் படையினர் குவிக்கப்பட்டனர்.

தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த முயன்ற 2,000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

முன்னாள் முதலமைச்சர்கள் கைது

இதைத்தொடர்ந்து தலைநகரில் சிஜேபி நடத்திய போராட்டங்களில் கலந்துகொள்ள முயன்ற, முன்னாள் முதலமைச்சர்களான மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், பினராயி விஜயன் மற்றும் மாணிக் சர்க்கார் ஆகியோரும் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டனர்.

பாஜக எம்.எல்.ஏ மகள் கைது

இந்த நிலையில் சிஜேபி-க்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ விக்ரம் சிங்கின் மகள் யஷஸ்வினி ராஜே சிங் டெல்லி காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இவர் கடந்த மாதங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராக முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி சிஜேபி நடத்திய மாணவர் போராட்டங்களில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com