தப்பு செஞ்சா வெட்டி வீசுங்க.. மாணவிகள் கையில் 'வாள்' வழங்கிய பா.ஜ.க. எம்.எல்.ஏ.

தீய எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் அழிக்கப்பட வேண்டும். தீயவர்களுக்கு எதிராக செயல்பட பெண்களை ஊக்கப்படுத்தினார்.
Photo Courtesy: IANS
Photo Courtesy: IANS
Published on

பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விஜயதசமி கொண்டாட்டத்தின் போது பாஜக எம்எல்ஏ மிதிலேஷ் குமார் சிறுமிகளுக்கு வாள்களை வழங்கினார்.

சீதாமர்ஹி நகரில் உள்ள கப்ரோல் சாலையில் நடைபெற்ற பூஜை ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், "எங்கள் சகோதரிகளை யாரேனும் தீயவர்கள் தொடத் துணிந்தால், அவரது கை இந்த வாளால் வெட்டப்படும்."

"நம் சகோதரிகள் கைகளை வெட்டும் அளவுக்கு உருவாக்க வேண்டும், தேவை இருப்பின் நான் மற்றும் நாம் அனைவரும் இதை செய்ய வேண்டும். நம் சகோதரிகளுக்கு எதிராக தீய எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் அழிக்கப்பட வேண்டும்," என்று தெரிவித்தார்.

மிதிலேஷ் குமார் தனது முயற்சிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும் தீயவர்களுக்கு எதிராக செயல்பட மக்களை குறிப்பாக பெண்களை ஊக்கப்படுத்தினார். இதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு வாள்கள் வழங்கப்பட்டன.

பூஜைக்கு வந்த இடத்தில் சட்டமன்ற உறுப்பினர் மிதிலேஷ் குமார் பல துப்பாக்கிகள், வாள்கள் மற்றும் பிற ஆயுதங்களை வைத்து வணங்கினார். சிதாமர்ஹி தொகுதியின் பாஜக எம்எல்ஏ-வான மிதிலேஷ் குமார் நவராத்திரியின் தொடக்கத்தில் பல துர்கா பூஜை பந்தல்களுக்குச் சென்று வாள்களை விநியோகித்தார்.

நவராத்திரியின் போது ஆயுத வழிபாடு இந்து சமூகத்தின் ஒரு பிரிவினரிடையே ஒரு பாரம்பரியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com