மஹுவா மொய்த்ரா மீது பாஜகவினர் முட்டை வீச்சு.. பாதுகாப்பு வழங்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிக்கு வீடியோ மெசேஜ்

இந்த சின்ன தாக்குதலுக்கு பயந்து பாதுகாப்பு வேண்டி உச்சநீதிமன்றத்தை அணுகுவது சரியல்ல
மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ரா
Published on
Summary

மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களை எம்பி மஹுவா மொய்த்ரா மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள தனது தொகுதியான கிரிஷ்ணராஜ சகாரில் நேற்று நடந்த அரசியல் கூட்டத்திற்கு மஹுவா சென்றுள்ளார். கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்த மஹுவாவை அங்கு கூடிய பாஜக தொண்டர்கள் கருப்பு கொடி காட்டி "திரும்பிப் போ" என கோஷம் எழுப்பி அமளி செய்துள்ளனர்.

அவர்களுடன் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட கைகலப்பு மூண்டது. இந்த பரபரப்பில் தனது காருக்கே திரும்பிச் சென்று ஏற முயன்ற மஹுவா மொய்த்ரா மீது முட்டை வீசப்பட்டுள்ளது.

வீடியோ

இந்த சம்பவத்தை தொடர்ந்து காரில் அமர்ந்தபடியே முட்டை வீசப்பட்ட கோலத்தில் வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்ட மொய்த்ரா, இந்த தாக்குதல் நடக்கும் என தனக்கு முன்னரே போலீசார் தகவல் தந்ததாகவும், இந்த தாக்குதலே போலீஸ் உதவியுடன் தான் நடந்துள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.

முன்னதாக ஏற்கனவே ஒரு முறை அவரது தொகுதியில் வைத்தே அவர் மீது முட்டை வீசப்பட்டது. இதனை தொடர்ந்து தனக்கு பாதுகாப்பு வேண்டி அவர் கல்கத்தா உயர்நீதிமன்றத்தை அணுகினார். ஆனால் அங்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்காததால் உச்சநீதிமன்றத்தை அணுகிறார்.

உச்சநீதிமன்ற நீதிபதி

அவர் மனு மீதான விசாரணையில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி தீபங்கர் தத்தா, மஹுவாவின் பாதுகாப்பு குறித்து கிண்டலாக, "இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர்கள் நாட்டுக்காக துப்பாக்கி குண்டுகளை எதிர்கொண்டனர், இந்த சின்ன தாக்குதலுக்கு பயந்து பாதுகாப்பு வேண்டி உச்சநீதிமன்றத்தை அணுகுவது சரியல்ல" என கூறினார்.

இதனை குறிப்பிட்டு தற்போதைய முட்டை வீச்சுக்கு பின் பேசிய வீடியோவில் மஹுவா, "நீதிபதி அவர்களே, உங்கள் அறிவுரைப்படி நான் ஒரு சுதந்திர போராட்ட வீரர் துப்பாக்கி குண்டுகளை எதிர்கொண்டது போல நான் என் மீதான தாக்குதலை எதிர்கொண்டேன்" என பகடியாக தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com