

ஜம்மு-காஷ்மீரில் பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு ஆட்சி நடைபெற்று வருகிறது. பரூக் அப்துல்லா மகன் உமர் அப்துல்லா முதல்வராக இருந்து வருகிறார்.
தேசிய மாநாடு கட்சியை சேர்ந்த மெஹ்தி என்பவர் ஸ்ரீநகர் தொகுதி எம்.பி.யாக இருந்து வந்தார். நேற்று அவர் தனது மக்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அத்துடன் தேசிய மாநாடு கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
எம்.பி. விலகிய நிலையில், ஆபரேசன் தாமரையை காஷ்மீரில் பாஜக செயல்படுத்தியுள்ளது என்று தேசிய மாநாடு கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஹஸ்ரத்பால் சல்மான் சாகர் தெரிவித்துள்ளார்.
மிகுந்த மனவேதனையுடன் இதைக் கூறுகிறேன் மகிழ்ச்சியுடன் அல்ல; ஏனெனில், அவர் எங்களது 'நேஷனல் கான்பரன்ஸ்' கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர். ஆகா சையத் ருஹுல்லா மெஹ்தியை வெளியேற்றுவதில் பாஜக வெற்றி பெற்றுவிட்டது.
கடந்த 80-90 ஆண்டுகளாக தேசிய மாநாட்டுக் கட்சியை (NC) பலவீனப்படுத்த முயன்று வரும் சக்திகளுடன் கைகோர்த்துள்ளார்.
குறிப்பாக கடந்த ஐந்து முதல் எட்டு ஆண்டுகளில், அதாவது 2018-ம் ஆண்டிலிருந்து, எங்கள் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட மூத்த தலைவர்கள் பொது பாதுகாப்புச் சட்டத்தின் (PSA) கீழ் தடுத்து வைக்கப்பட்டனர். இவ்வாறு சிறைவைக்கப்பட்டவர்கள், மக்களின் பிரதிநிதிகளாகச் செயல்பட்டார்கள் என்பதற்காகவே தண்டிக்கப்பட்டனர்.
ஜம்முவில் தேவேந்தர் சிங் ராணா மற்றும் சுர்ஜித் சிங் ஸ்லாதியா போன்ற கட்சித் தலைவர்களை தங்கள் பக்கம் ஈர்த்ததில் முன்னதாகவே வெற்றி பெற்றிருந்த பாஜக, தற்போது காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் ஆபரேஷன் தாமரையை (Operation Lotus) வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது.
இவ்வாறு சாகர் தெரிவித்தார்.