வெளிநாடு சென்ற அண்ணாமலை- ஒருங்கிணைப்பு குழுவை அறிவித்த பா.ஜ.க.

அண்ணாமலை லண்டன் சென்றுயுள்ளார்.6 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு சென்ற அண்ணாமலை- ஒருங்கிணைப்பு குழுவை அறிவித்த பா.ஜ.க.
Published on

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்பிற்காக 3 மாதம் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றுள்ளார். அண்ணாமலை வெளிநாடு சென்றதால் இடைப்பட்ட காலத்தில் யார் கட்சி செயல்பாடுகளை கவனிப்பார்கள் என்று ஒரு கேள்வி எழுந்தது.

அதற்கு ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ளார். எச்.ராஜா தலைமையில் 6 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் ஹெச். ராஜா தலைமையில் 6 பேர் உள்ளனர். மாநில துணைத் தலைவர் சக்ரவர்த்தி, பேராசிரியர் கனகசபாபதி, மாநில பொதுச் செயளாலர் எம்.முருகானந்தம், ராம சீனிவாசன், எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் இந்த குழுவில் இடம் பிடித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com