

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் லால்டி தேவி. இவர் மீன் சாப்பிடும்போது திடீரென தொண்டையில் முள் சிக்கியுள்ளது. இதற்கு சிகிச்சை மேற்கொண்ட போதிலும், உடல்நிலை சரியாகவில்லை. அதேவேளையில், உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது.
எல்லோரும் அவருடைய உடல்நிலை குறித்து கவலை அடைந்தனர். அதேவேளையில் அவருடைய மகன், 19 வயதான மோனு மேட்டூர்பாலா பிரார்த்தனை செய்ய தொடங்கினார். பீகார் மாநிலத்தில் உள்ள ஜெகநாபாத்தில் உள்ள பராபர் மலையில் உள்ள பாபா சித்தேஷ்வர் நாத் கோவிலுக்கு சென்றார். அங்கு, தனது தாயராருக்கு உடல்நிலை சரியானால், நாடு முழுவதும் உள்ள 12 ஜோதிர்லிங்கத்தை ஓடியே தரிசனம் செய்வேன் என்று வேண்டியுள்ளார்.
அவர் வேண்டியபின், தயார் லால்டி துவியின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து குணமடைந்துள்ளார். இதனால் நேர்த்திக்கடனை நிறைவேற்ற பீகாரில் இருந்து 12 ஜோதிர் லிங்கத்தையும் தரிசனம் செய்ய முடிவு செய்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி நேர்த்திக்கடனை நிறைவேற்ற ஓடத்தொடங்கியுள்ளார். ஒரு நாளைக்கு 50 கி.மீ. தூரம் ஓட முடிவு செய்து இதுவரை 8 ஆயிரம் கி.மீ. தூரம் ஓடி, 6 ஜோதிர்லிங்கத்தை தரிசனம் செய்துள்ளார். தற்போது அவர் மகாராஷ்டிராவில் உள்ளார். இன்னும் 6 ஜோதிர் லிங்கத்தை திரிசனம் செய்ய இருக்கிறார்.
மோனுவிற்கு உதவி செய்ய 2 பேர் அவருடன் செல்கிறார்கள். எவ்வளவு கஷ்டம் ஏற்பட்டாலும் தயாராக்காக நேர்த்திக்கடனை முடிக்காமல் வீடு திரும்பமாட்டேன் என்று சோனு உறுதியாக தெரிவித்துள்ளார்.