இணையத்தை உலுக்கும் புதிய சமோசா மோகம்

சமீப காலமாக இணையத்தில் சமோசா தயாரிப்பு தொடர்பாக மட்டுமே புதுபுது வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. வீடியோ இணையத்தில் வைரலாகி லட்சக்கணக்கான பார்வைகளை குவித்துள்ளது.
இணையத்தை உலுக்கும் புதிய சமோசா மோகம்
Published on

இந்தியாவில் தெருவோரங்கள் மற்றும் தள்ளுவண்டியில் விற்பனை செய்யப்படும் சிற்றுண்டி வகைகள் மற்றும் தின்பண்டங்களில் சமோசாவுக்கு தனி இடம் உண்டு. காரமான மசாலா கலவைகள் தொடங்கி பல்வேறு ரகங்களில் சமோசாக்கள் தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில் சமீப காலமாக இணையத்தில் சமோசா தயாரிப்பு தொடர்பாக மட்டுமே புதுபுது வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள புதிய 'பிந்தி சமோசா' மோகம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக மசாலா உருளைக்கிழங்கால் சமோசாக்கள் தயாரிக்கப்படும் நிலையில் இந்த புதிய வகை பிந்தி சமோசாவில் பச்சை நிறத்தில் சட்னி உள்ளிட்ட கலவை நிரப்பி தயாரிக்கப்படும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி லட்சக்கணக்கான பார்வைகளை குவித்துள்ளது. வீடியோவை பார்த்த உணவு ஆர்வலர்கள் பலரும் இந்த சமோசா தயாரிப்பு குறித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர் சமோசாவை அப்படியே விட்டு விடுங்கள் எனவும், மற்றொரு பயனர், சமோசா சாப்பிடும் மனநிலையை அழித்து விட்டீர்கள் எனவும் பதிவிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com