3வது மாடியில் இருந்து கீழே விழுந்த 2 வயது சிறுவன்.. விளையாடிக் கொண்டிருந்தபோது விபரீதம்

தரையில் மோதி அதன் தாக்கத்தால் மேலே எம்பியுள்ளான்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on: 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 2 வயது சிறுவன் அடுக்குமாடி குடியிருப்பின் 3 ஆம் தளத்தில் இருந்த கீழே விழுந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

பெங்களூரு

பெங்களூருவின் சிக்கா அடுகோடி பகுதியில் நேற்று காலை 10.50 மணியளவில் மூன்றாம் மாடியில் இருந்த தனது வீட்டின் வெளியே அமைக்கப்பட்டுள்ள கிரீல் மீது சிறுவன் ஏறியபோது தவறி கீழே விழுந்துள்ளான். அப்போது பெற்றோர் யாரும் உடனிருக்கவில்லை.

காயம்

நேரில் கண்டவர்கள் சாட்சிபடி, சிறுவன் விழுந்த வேகத்தில் அவன் பின்புறம் தரையில் மோதி அதன் தாக்கத்தால் மேலே எம்பியுள்ளான்.

இதனால் சிறுவனுக்கு அதிக காயம் ஏற்பட்டுள்ளது. அருகே ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த இரு பெண்கள் சிறுவன் விழுந்ததை பார்த்து அங்கு ஓடிச் சென்றுள்ளனர்.

மீட்பு

மேலும் குடியிருப்பு வாசிகளும் அங்கு விரையவே, சிறுவனை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்று கோராமங்களாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு சிறுவன் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறான். அவனது உடனல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெற்றோர்

சிறுவனின் பெற்றோர் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சிறுவனின் தந்தை சமையளாலாக வேலை பார்த்து வருகிறார்.

இதுவரை இந்த சம்பவம் குறித்து எந்த புகாரும் வரவில்லை என்றும் சிறுவன் விழுந்த சூழ்நிலை குறித்து விசாரித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com