பெங்களூரு: மனைவியை தலையணையால் அமுக்கி கொன்றுவிட்டு தற்கொலை செய்த சிவில் இன்ஜினீயர் கணவன்

பதற்றத்தில் தனது தாயாருக்கு விவரத்தை கூறி மெசேஜ் அனுப்பியுள்ளார்.
பத்மாவதி ,சுமாந்த் ஜெயின்
பத்மாவதி, சுமாந்த் ஜெயின்
Published on: 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மனைவியை தலையணையால் அமுக்கிக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

பெங்களூரு

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ராஜகோபால் நகர் அருகே சுமாந்த் ஜெயின் எனபவர் சிவில் பொறியாளராக பணியாற்றி வந்தார்.

அவரது மனைவி பத்மாவதி மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார்.

கொலை

கடந்த புதன்கிழமை இரவு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணவர் சுமாந்த் ஜெயின், மனைவி பத்மாவதியின் முகத்தில் தாக்கி அவரை தலையணையால் அமுக்கி மூச்சுத் திணரச் செய்துள்ளார்.

மனைவி மூச்சு பேச்சின்றி இருந்ததை உணர்ந்த சுமாந்த் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தற்கொலை

தற்கொலை முடிவுக்கு வந்த சுமாந்த், பதற்றத்தில் தனது தாயாருக்கு விவரத்தை கூறி மெசேஜ் அனுப்பியுள்ளார்.

மெசேஜைப் பார்த்த தாயார் உடனடியாக வீட்டின் உரிமையாளரை தொடர்பு கொண்டுள்ளார்.

உரிமையாளர் வீட்டைத் திறந்து பார்த்தபோது, ஹாலில் உள்ள மின்விசிறியில் சுமாந்த் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இருந்துள்ளார். பத்மாவதி சடலமாக கிடந்துள்ளார்.

விசாரணை

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ராஜகோபால் நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றினர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இருவரின் உயிரிழப்பிற்கான துல்லியமான காரணம் மற்றும் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com