பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டதாக கருதப்படும் வங்கதேச நபர் அசாமில் கைது

தனித்து செயல்பட்டாரா அல்லது ஒரு பெரிய வலையமைப்பின் பகுதியாகசெயல்பட்டாரா என்பதும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
Bangladeshi Man Arrested
Published on: 

தடைசெய்யப்பட்ட ஹர்கத்-உல்-ஜிஹாத்-அல்-இஸ்லாமி (HUJI) என்ற பயங்கரவாத குழுவுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 55 வயதான வங்கதேச நாட்டவர் ஒருவர், அசாம் மாநிலத்தின் கச்சார் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து போலியானவை என கூறப்படும் இந்திய அடையாள ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சாஜித் என்ற சையத் மியா என அடையாளம் காணப்பட்ட குற்றவாளி, ஜிரிகாட்டில் கச்சார் காவல்துறை மற்றும் அசாம் ரைபிள்ஸ் நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டார். அவர் வங்கதேசத்தின் நாராயண்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது.

தீவிர ஆய்வு:

கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், மேற்கு வங்கத்தின் கூச் பெஹார் முகவரியை கொண்ட ஆதார் அட்டையும், மேகாலயா முகவரியை கொண்ட பான் அட்டையும் அடங்கும். இந்திய மற்றும் வங்கதேச நாணயங்களும் மீட்கப்பட்டன. விசாரணை குறித்து அறிந்த வட்டாரங்களின்படி, சாஜித் ஆரம்பத்தில் தன்னை ஒரு இந்திய குடிமகன் என்று கூறிக்கொண்டாலும், விசாரணையின்போது தனது வங்கதேச அடையாளத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

அவர் பல ஆண்டுகளாக வடகிழக்கு பகுதிகளில் சுற்றி திரிந்து, உள்ளூர் இளைஞர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி ஒரு வலையமைப்பை கட்டியெழுப்ப முயன்றதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். கீழ் அசாம் மற்றும் போடோலாந்து பிராந்தியத்தின் கீழ் உள்ள பகுதிகளில் அவரது நடவடிக்கைகள் தற்போது தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

உறுதியாகவில்லை:

மணிப்பூர் மற்றும் அசாமின் சிரங் மாவட்டத்தில் சில இளைஞர்கள் ஆயுத பயிற்சிக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோதனையின் போது மீட்கப்பட்ட ஆவணங்களையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருவதுடன், அசாம் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அவரது தொடர்புகளையும் கண்டறிந்து வருகின்றனர். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் முழு அளவையும், அவர் தனித்து செயல்பட்டாரா அல்லது ஒரு பெரிய வலையமைப்பின் பகுதியாகசெயல்பட்டாரா என்பதும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

X