Helmet | தெலுங்கானாவில் ஹெல்மெட் அணியாமல் ஊருக்குள் நுழைய தடை - வினோத பேனர் வைத்த கிராம மக்கள்

வாகன விபத்தால் ஏற்படும் அபாயங்கள், ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு அளித்தனர்.
Helmet | தெலுங்கானாவில் ஹெல்மெட் அணியாமல் ஊருக்குள் நுழைய தடை - வினோத பேனர் வைத்த கிராம மக்கள்
Published on

தெலுங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டம் பையாரம் அருகே வெங்கட்ராம் புரம் கிராமம் உள்ளது.

இந்த கிராமத்தில் கடந்த வாரம் போலீசார் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது வாகன விபத்தால் ஏற்படும் அபாயங்கள், ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு அளித்தனர்.

இதையடுத்து பஞ்சாயத்து நிர்வாகம் ஹெல்மெட் அணியாமல் ஊருக்குள் நுழைய கூடாது என தீர்மானம் நிறைவேற்றினர். கிராமத்தின் நுழைவு வாயிலில் பேனர் ஒன்றை வைத்தனர். அதில் ஹெல்மெட் அணியாமல் யாரும் ஊருக்கு வர கூடாது என தெரிவித்துள்ளனர். அந்த வழியாக செல்பவர்கள் வியப்புடன் இந்த பேனரை பார்த்து செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com