எனர்ஜி ட்ரிங் என்ற லேபிளை ‘ரெட் புல்’ பயன்படுத்த தடை - உணவு பாதுகாப்பு துறைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு

இந்தியாவில் விற்பனையில் ஈடுபட்டு வரும் ஆஸ்திரிய நிறுவனமான ரெட் புல், தனது விளம்பரங்களில் ‘எனர்ஜி ட்ரிங்’ என்ற அடைமொழியை பயன்படுத்தி வந்தது.
Energy Drink Label Ban
Published on: 
Summary

குளிர்பான நிறுவனமான ரெட் புல், 'எனர்ஜி டிரிங்க்' என்ற அடைமொழியை பயன்படுத்த இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தடை விதித்த நிலையில், தற்போது அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்தியாவில் விற்பனையில் ஈடுபட்டு வரும் ஆஸ்திரிய நிறுவனமான ரெட் புல், தனது விளம்பரங்களில் ‘எனர்ஜி ட்ரிங்’ என்ற அடைமொழியை பயன்படுத்தி வந்தது.

இதையடுத்து கடந்த ஜூலை மாதம், பெப்சிகோ, ரெட் புல், மான்ஸ்டர் பெவரேஜ், ரிலையன்ஸ் மற்றும் ஹெல் எனர்ஜி உள்ளிட்ட உலகளாவிய குளிர்பான நிறுவனங்கள்,

அதிக காஃபின் கொண்ட தங்கள் பானங்களிலிருந்து 'எனர்ஜி டிரிங்க்' என்ற அடைமொழியை நீக்குவதற்கு, உணவு பாதுகாப்பு துறை 90 நாட்கள் அவகாசம் வழங்கியது.

இந்த அறிவிப்பு குறித்து உணவு பாதுகாப்பு துறை கூறுகையில், "எனர்ஜி டிரிங்க்ஸ்" என சந்தைப்படுத்தப்படும் தயாரிப்புகளுக்கு தற்போது பரிந்துரைக்கப்பட்ட இந்திய தரநிலைகள் எதுவும் இந்த தயாரிப்பு நிறுவனங்களின் பானங்களில் இல்லை என்று கூறியது.

மாறாக, இந்த தயாரிப்புகள் காஃபின் கலந்த பானங்களாகவே ஒழுங்குபடுத்தப்படுகின்றன எனவும், மேலும் "எனர்ஜி டிரிங்க்ஸ்" என்ற சொல்லை பயன்படுத்துவது விதிமுறைகளை மீறுவதாகும் என்றும் உணவு பாதுகாப்பு துறை கூறியது.

மேலும், இதுபோன்ற பல பானங்களில், ஆற்றலின் முதன்மை ஆதாரம் என்பது வெறுமனே சர்க்கரை சேர்க்கப்பட்ட மற்றும் அதிக காஃபின் கலவையாக உள்ளதாக தெரிவித்தது.

லேபிள்கள் நுகர்வோரைத் தவறாக வழிநடத்தக் கூடாது என்றும், "ஆற்றல் பானம்" என்ற சொல் சிறப்பு உடல்நலம் அல்லது ஆற்றல் நன்மைகள் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கக்கூடும் என்றும் உணவு பாதுகாப்பு துறை கூறியது.

இந்த வகையான பானங்கள் உடலுக்கும் மனத்துக்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது என்றும் பொதுவான பலவீனத்திற்கு உதவுகிறது, போன்ற விளம்பரக் கூற்றுகள் நுகர்வோரை தவறாக வழிநடத்தக்கூடும் என்றும் உணவு பாதுகாப்பு துறை கவலை தெரிவித்தது.

இந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறையில் நடவைக்கைக்கு எதிராக ரெட் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இதுகுறித்து ரெட்புல் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், இந்த உத்தரவு முன் அறிவிப்பின்றி பிறப்பிக்கப்பட்டதாகவும், இது நாட்டில் உள்ள தனது முதலீடுகளுக்கு நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதாகவும் கூறியுள்ளது.

இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரெட் புல் நிறுவனத்திற்கு எதிரான தனது முடிவை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நீதிமன்றத்தில் நியாயப்படுத்தி கருத்துகளை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com