காதலில் கைத்தேர்ந்தவரா நீங்கள்..? அதிரடி விளம்பரத்தை வெளியிட்ட பெங்களூரு நிறுவனம்

விண்ணப்பத்தாரர்கள் 3 டேட்டிங் செயலிகளை பயன்படுத்த வேண்டும், காதல், டேட்டிங்-ல் தற்போதைய ட்ரெண்டில் இருக்க வேண்டும்.புதியவற்றை உருவாக்குவதற்கான படைப்பாற்றல் குறைந்தது 2-3 டேட்டிங் பயன்பாடுகளில் முதல் அனுபவம் இருக்க வேண்டும்.
காதலில் கைத்தேர்ந்தவரா நீங்கள்..? அதிரடி விளம்பரத்தை வெளியிட்ட பெங்களூரு நிறுவனம்
Published on

கர்நாடகா மாநிலம், பெங்களூருவை தளமாகக் கொண்ட நிறுவனம் டாப்மேட். இந்த நிறுவனம் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. நீங்க எதிர்பார்க்கிறது போல், பி.இ., எம்பிஏ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு இல்லங்க. இது வேற ரகம்.

ஆமாங்க.. டாப் மேட் நிறுவனம் காதலில் கைத்தேர்ந்தவரைதான் தேடி வருகிறது. பக்கா காதல் மன்னனை தலைமை டேட்டிங் அதிகாரி பதவியில் அமர்த்த இந்நிறுவனம் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த வேலைக்கு தேவையான தகுதி குறித்தும் டாப்மேட் நிறுவனம் அறித்துள்ளனர்.

அதன்படி, தலைமை டேட்டிங் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் காதலில் கைதேர்ந்தவர்களாகவும், குறைந்தது ஒரு காதல் தோல்வியையாவது கடந்து வந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது

மேலும், விண்ணப்பத்தாரர்கள் 3 டேட்டிங் செயலிகளை பயன்படுத்த வேண்டும், காதல், டேட்டிங்-ல் தற்போதைய ட்ரெண்டில் இருக்க வேண்டும் எனவும் தகுதிகளை அந்நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.

டேட்டிங் போக்குகள் பற்றிய ஆழமான அறிவு, மேலும் புதியவற்றை உருவாக்குவதற்கான படைப்பாற்றல்

குறைந்தது 2-3 டேட்டிங் பயன்பாடுகளில் முதல் அனுபவம் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், டாப்மேட்டின் விருப்பமான விண்ணப்பதாரர்கள் 'டேட்களை' பெறுவார்கள் - காதல் வகை டேட்டிங் அல்ல, ஆனால் அதுஉண்மையான சாப்பிடும் வகை டேட்ஸ் (பேரிச்சைப்பழம்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்பு எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com