தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் உள்ள 17 மாவட்டங்களை உள்ளடக்கிய ஐந்து பல்தடத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இந்திய ரெயில்வேயின் தற்போதைய ரெயில் பாதை வலையமைப்பு சுமார் 540 கி.மீ. அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் ரெயில்வே அமைச்சகத்தின் சுமார் ரூ. 10,021 கோடி மொத்த மதிப்பிலான ஐந்து திட்டங்களுக்கு இன்று ஒப்புதலை வழங்கியுள்ளது
அதன்படி அரக்கோணம் – ரேணிகுண்டா 3வது மற்றும் 4வது வழித்தடம் – 77 கி.மீ.
வைட்ஃபீல்ட் – பங்காரப்பேட்டை 3வது மற்றும் 4வது வழித்தடம் – 47 கி.மீ.
ஓசூர் – ஓமலூர் இரட்டிப்புப் பாதை – 147 கி.மீ.
சேலம் - கரூர் - திண்டுக்கல் இரட்டிப்பு - 159 கி.மீ ஆகிய வழித்தடங்களுக்கு ஒப்புதலானது வழங்கப்பட்டுள்ளது
இந்த புதிய வழித்திட்டங்கள் மூலம் முறையான செயல்பாடுகளை செயல்படுத்தவும், நெரிசலை குறைக்கவும், இந்த புதிய திட்டமானது பிரதமர் மோடியின் புதிய இந்தியா தொலைநோக்கு பார்வைக்கு இணங்க அமைந்துள்ளன. இந்த வழித்தடங்கள் அமைவதன் மூலம் அப்பகுதிகளில் வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கி தற்சார்பு நிலையை இது உருவாக்குகிறது.
குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள 17 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த ஐந்து திட்டங்களுக்கான அறிவிப்பானது இந்திய ரெயில்வேயின் தற்போதைய வலையமைப்பை சுமார் 540 கி.மீ. அளவுக்கு அதிகரிக்கும்.
மேலும் அங்கீகரிக்கப்பட்ட இந்த பலவழித் திட்டங்கள், சுமார் 52 லட்சம் மக்கள்தொகை கொண்ட ஏறத்தாழ 2,121 கிராமங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும்.
இந்த புதிய வழித்தடங்கள் அமைவதன் மூலம், திருப்பதி, சுப்பிரமணிய சுவாமி கோயில் (திருத்தணி), ஸ்ரீ பத்மாவதி அம்மாவாரி கோயில் (திருச்சானூர்), கோட்டிலிங்கேஸ்வர தேவாலயம், ஸ்ரீ சீதி பைரவேஸ்வர சுவாமி கோயில், பங்காரு திருப்பதி,
கோலார் கோல்ட் ஃபீல்ட்ஸ், ஹோகன்னக்கல் ஃபார்டால்ஸ், ஹோகன்னக்கல், ஹோகன்னக்கல் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள பல முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு ரெயில் இணைப்பை மேம்படுத்த வழிவகை செய்கிறது.
மலைகள், சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், நாமக்கல் கோட்டை, கல்யாண பசுபதேஸ்வரர் கோவில், யாதகிரிகுட்டா கோவில், போங்கீர் கோட்டை, சுரேந்திரபுரி, ஸ்வர்ணகிரி கோவில் மற்றும் நிலக்கரி, சிமெண்ட், இரும்பு மற்றும் எஃகு, கொள்கலன்கள், வாகனங்கள், உணவு தானியங்கள், பெட்ரோலியப் பொருட்கள், உரங்கள் போன்ற சரக்குகளின் போக்குவரத்திற்கு இந்த புதிய வழித்தடமானது முக்கியமான ஒன்றாக அமைய இருக்கிறது.