எந்த நேரமும் நான் கொலை செய்யப்படலாம்.. எம்.பி. பப்பு யாதவ் அமித்ஷாவிடம் அடைக்கலம்

மக்களவை எம்.பி. பப்பு யாதவ் 24 மணிநேரதத்தில் பிஷ்னோய் கும்பலை அளித்துவிடுவேன் என்றார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.
எந்த நேரமும் நான் கொலை செய்யப்படலாம்.. எம்.பி. பப்பு யாதவ் அமித்ஷாவிடம் அடைக்கலம்
Published on

மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் அஜித் பவார் சிவ சேனா தலைவரைக் கொன்ற லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய துடித்து வருகிறது. இதனால் அவரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பீகார் பூர்ணியா தொகுதி மக்களவை எம்.பி. பப்பு யாதவ், நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை 24 மணி நேரத்தில் தான் அழித்து விடுவேன் என்றும் பேசினார். இதனால் அவருக்கும் அந்த கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.

எனவே தனக்கு Z கேட்டகிரி பாதுகாப்பு வேண்டும் என்று பப்பு யாதவ் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேரடியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.

அதில், எனது உயிருக்கு அச்சுறுத்துதல் ஏற்படுத்தும் வகையில் மிரட்டல் வந்த பிறகும் பீகார் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்காமல் செயலிழந்துள்ளது. இப்போது எனக்கு Z கேட்டகிரி பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றால் எந்த நேரமும் நான் கொலை செய்யப்படலாம் என்று கூறியுள்ள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com