ஆந்திராவில் வேன் மீது லாரி மோதி 3 பேர் பலி

வேன் கமலபாடு என்ற இடத்தில் சென்ற போது எதிரே வந்த கண்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக வேன் மீது மோதியது.
ஆந்திராவில் வேன் மீது லாரி மோதி 3 பேர் பலி
Published on: 
Summary

விபத்தில் வேனில் இருந்த ஆடு வியாபாரிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டத்தை சேர்ந்த ஆடு வியாபாரிகள் தெலுங்கானா மாநிலம், குராஜலா சந்தையில் ஆடுகளை விற்பனை செய்வதற்காக நேற்று இரவு புறப்பட்டனர்.

வேனில் வியாபாரிகள் மற்றும் ஏராளமான ஆடுகள் இருந்தன. நள்ளிரவு வேன் கமலபாடு என்ற இடத்தில் சென்ற போது எதிரே வந்த கண்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக வேன் மீது மோதியது.

விபத்து

இந்த விபத்தில் வேனில் இருந்த ஆடு வியாபாரிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 7 ஆடுகள் பலியானது. பலர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த பல்நாடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X