ஆனந்த் அம்பானி ட்ரெஸ்ல தம்மாத்துண்டு இருக்குற இதோட விலை கோடி ரூபாயா?

திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், அவரது மகள் சவுந்தர்யா, மகனுடன் தமிழ் பாரம்பரிய ஆடை அணிந்து வந்து இருந்தனர்.ப்ரூச்சை ஆனந்துக்கு அவரது சகோதரர் ஆகாஷ் அம்பானி பரிசளித்ததாக கூறப்படுகிறது.
ஆனந்த் அம்பானி ட்ரெஸ்ல தம்மாத்துண்டு இருக்குற இதோட விலை கோடி ரூபாயா?
Published on

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆன்ந்த அம்பானியின் ஆடம்பர திருமணம் நேற்று மும்பையில் நடைபெற்றது. கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்கு முந்தைய வைபவங்களும், கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது.

நேற்று மும்பை பி.கே.சி.யில் உள்ள அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான ஜியோ வேர்ல்டு டிரைவ் கன்வென்சன் அரங்கில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடந்தது.

திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், அவரது மகள் சவுந்தர்யா, மகனுடன் தமிழ் பாரம்பரிய ஆடை அணிந்து வந்து இருந்தனர். இதேபோல கிரிக்கெட் வீரர் டோனி, மனைவி சாக்சி, மகள் ஜிவாவுடன் மஞ்சள்நிர பாரம்பரிய உடையணிந்து வந்து இருந்தார். மேலும் ஹாலிவுட் நடிகர் ஜான் சீனா, நடிகர்கள் அனில் கபூர், சஞ்சய் தத், வெங்கடேஷ், வருண் தவான், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், ஜாக்கி ஜெராப், ராஜ்குமார் ராவ், நடிகைகள் பிரியங்கா சோப்ரா, சாரா அலிகான், ஜான்வி கபூர், இயக்குனர் கரன் ஜோகர், கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், திருமணத்திற்கு முந்தைய விழாவில் ஆனந்த் அம்பானி கோடி மதிப்புள்ளான ப்ரூச் அணிந்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Panthere De Cartier ப்ரூச் ஆனது 51 சபையர்கள், இரண்டு மரகதங்கள் மற்றும் ஒரு ஓனிக்ஸ் வைரம் ஆகியவற்றை கொண்ட 18K தங்கத்தால் ஆனது.

இந்த ப்ரூச்சை ஆனந்துக்கு அவரது சகோதரர் ஆகாஷ் அம்பானி பரிசளித்ததாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com