VIDEO- அனந்த் அம்பானி அறக்கட்டளை சார்பில் பிளிங்கிட் ஊழியருக்கு ஸ்கூட்டர் பரிசு: வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ

தனக்கெனப் பிரத்யேகமாகப் புதிய வாகனம் வழங்கப்பட்டதை உணர்ந்த சுஜித் நம்ப முடியாமல் திகைத்துப் போனார்.
Blinkit employee
Published on: 
Summary

மும்பையைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலர் மற்றும் இன்ஃப்ளூயன்சர் ஹுசைன் மன்சூரி, அனந்த் அம்பானியின் அறக்கட்டளை சார்பில் பிளிங்கிட் டெலிவரி ஊழியர் சுஜித் என்பவருக்குப் புதிய ஸ்கூட்டர் பரிசளித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலர் மற்றும் இன்ஃப்ளூயன்சர் ஹுசைன் மன்சூரி, அனந்த் அம்பானியின் அறக்கட்டளை சார்பில் பிளிங்கிட் டெலிவரி ஊழியர் சுஜித் என்பவருக்குப் புதிய ஸ்கூட்டர் பரிசளித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

கடுமையாக உழைத்தும் வறுமை காரணமாக பைக் வாங்க முடியாத சூழ்நிலையில் இருந்த சுஜித்க்கு, திடீரெனக் கிடைத்த இந்த இன்ப அதிர்ச்சி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மும்பை வீதிகளில் பிளிங்கிட் ஆர்டர்களைச் டெலிவரி செய்வதற்காகச் சுஜித் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை இடைமறித்த ஹுசைன் மன்சூரி, அவரது அன்றாடப் பணிகள் மற்றும் வாழ்க்கை முறை குறித்து விசாரித்துள்ளார். மேலும், ஏன் மோட்டார் சைக்கிள் வாங்கவில்லை என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

விலைவாசி உயர்வு

அதற்குப் பதிலளித்த சுஜித், தற்போதைய காலத்தில் நிலவும் கடுமையான விலைவாசி உயர்வைச் சுட்டிக்காட்டினார். "சார், கிடைக்கும் இந்தச் சிறிய வருமானத்தில் எப்படி பைக் வாங்க முடியும்? விலைவாசி அதிகமாக இருக்கிறது" என்று தனது இயலாமையையும் சிரமத்தையும் வெளிப்படுத்தினார். அவரது இந்த எளிய பதில் அங்கிருந்தவர்களைப் பெரிதும் ஈர்த்தது.

காத்திருந்த இன்ப அதிர்ச்சி

உடனே சுஜித்தை தனது டெலிவரி வேலையைச் செய்துவிட்டுத் திரும்புமாறு மன்சூரி கூறியுள்ளார். அவர் திரும்பி வந்தவுடன், மறைத்து வைக்கப்பட்டிருந்த புதிய ஸ்கூட்டர் ஒன்றை அவரிடம் பரிசாக வழங்கினார். தனக்கெனப் பிரத்யேகமாகப் புதிய வாகனம் வழங்கப்பட்டதை உணர்ந்த சுஜித் நம்ப முடியாமல் திகைத்துப் போனார்.

தனக்குக் கிடைத்த எதிர்பாராத பரிசைக் கண்டு ஆனந்தக் கண்ணீர்விட்ட சுஜித், ஹுசைன் மன்சூரியைக் கட்டியணைத்துத் தன் நன்றியைத் தெரிவித்தார். உணர்ச்சி பெருக்கெடுக்க அவர் தழுதழுத்த குரலில் கூறிய "நன்றி சார்" என்ற வார்த்தைகள் இணையத்தில் வைரலாகின. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த நெகிழ்ச்சியான காணொளி இதுவரை 46 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com