ஆர்டரை ரத்து செய்த பயனர்... 2 ஆண்டுகளுக்கு பிறகு டெலிவரி ஆன பிரஷர் குக்கர்

ஜெய் ஆர்டரை ரத்து செய்து பணத்தை திரும்ப பெற்றுள்ளார்.இது மிகவும் சிறப்பான பிரஷர் குக்கராக இருக்க வேண்டும் என்று ஜெய் தெரிவித்துள்ளார்.
ஆர்டரை ரத்து செய்த பயனர்... 2 ஆண்டுகளுக்கு பிறகு டெலிவரி ஆன பிரஷர் குக்கர்
Published on

ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்களை ஒரே நாளில் டெலிவரி செய்வது வழக்கமாகி வரும் உலகில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்ட ஆர்டரை சமீபத்தில் பெற்றதாக ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜெய் என்பவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமேசானில் இருந்து பிரஷர் குக்கரை ஆர்டர் செய்துள்ளார். பின்னர் அவர் ஆர்டரை ரத்து செய்து பணத்தை திரும்ப பெற்றுள்ளார்.

ஆர்டரை ரத்து செய்த போதிலும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்டர் செய்த பொருள் அவரது வீட்டுக்கு வந்துள்ளது.

இதையடுத்து அவர், "2 ஆண்டுகளுக்குப் பிறகு எனது ஆர்டரை வழங்கியதற்கு நன்றி அமேசான்" என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், பிரஷர் குக்கர் அக்டோபர் 1, 2022 அன்று ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 28, 2024 அன்று ஆர்டரை பெற்றுள்ளார்.

இது மிகவும் சிறப்பான பிரஷர் குக்கராக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com