அகில இந்திய வானொலியில் அத்துமீறல்: ராகுல், பிரியங்கா மீது வழக்குப்பதிவு

டெல்லியில் நேற்று எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கண்டன பேரணி நடத்தினார்கள்.
Priyanka gandhi-Rahul gandhi
Published on: 

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்.) பணிகளில் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி

இதற்கிடையே தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் நேற்று எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கண்டன பேரணி நடத்தினார்கள். தேர்தல் ஆணைய தலைமை அலுவலகம் நோக்கி சென்ற அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதைதொடர்ந்து பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அவர்களின் போராட்டம் 8 மணி நேரம் நீடித்தது. பின்னர் ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்ட 206 பேரை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோர் பேரணியின் போது அகில இந்திய வானொலி நிலைய அலுவலகத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராகுல்- பிரியங்கா மீது வழக்கு

இந்தநிலையில் ராகுல்காந்தி, பிரியங்கா மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆகாஷ்வானி பவனில் (அகில இந்திய வானொலி அலுவலகம்) அனுமதிஇன்றி அத்துமீறி நுழைந்ததாக கூறி எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.

புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com