மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் ஷாருக் கான்

திடீர் உடல்நலக் குறைவால் ஷாருக் கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.நடிகர் ஷாருக் கான் நலமுடன் உள்ளார் என அவரது மேனேஜர் தெரிவித்தார்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் ஷாருக் கான்
Published on

அகமதாபாத்:

குஜராத்தின் அகமதாபாத்தில் நடந்த குவாலிபையர் 1 போட்டியைக் காண பிரபல பாலிவுட் நடிகரும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி உரிமையாளருமான ஷாருக் கான் சென்றார்.

போட்டி முடிந்த நிலையில் திடீர் உடல்நலக் குறைவால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.

வெப்ப அலை காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் நீர்ச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்ட ஷாருக் கான் அகமதாபாத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

இதற்கிடையே, நடிகர் ஷாருக் கான் நலமுடன் உள்ளார் என தெரிவித்த அவரது மேனேஜர் பூஜா தத்லானி, ஷாருக் கான் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்த ரசிகர்கள் மற்றும் நலவிரும்பிகளுக்கு நன்றி என்றார்.

இந்நிலையில், அகமதாபாத் மருத்துவமனையில் இருந்து நடிகர் ஷாருக் கான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com