நடிகர் ஷாருக் கான் மருத்துவமனையில் திடீர் அனுமதி

ஷாருக் கான் நேரடியாகச் சென்று கொல்கத்தா அணி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.ஹீட் ஸ்ட்ரோக்கால் தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
நடிகர் ஷாருக் கான் மருத்துவமனையில் திடீர் அனுமதி
Published on

அகமதாபாத்:

பிரபல பாலிவுட் நடிகரும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி உரிமையாளருமான ஷாருக் கான் திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அகமதாபாத்தில் நடந்த குவாலிபையர் 1 சுற்றில் வெற்றிபெற்ற கொல்கத்தா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியை கொல்கத்தா அணி உரிமையாளரான ஷாருக் கான் நேற்று மைதானத்தில் நேரடியாகக் கண்டுகளித்து, தன் அணி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

ஷாருக் கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெப்ப அலைகள் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் நீர்ச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ள ஷாருக் கான், தற்போது அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகத் தகவல் வெளியாகியது.

X

Maalai Malar
www.maalaimalar.com