ஆடி மாதம் முடிஞ்சுடுச்சு.. மகளை அழைத்துச் செல்ல வந்த புதுமாப்பிள்ளைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மாமியார்

இதுபோல் மாமனார் மாமியார் மனைவி கிடைப்பதற்கு பாக்கியம் செய்து இருக்க வேண்டும்
Aadi feast
Published on

தெலுங்கானா மாநிலம், நர்சி பட்டினத்தை சேர்ந்தவர் ரமேஷ் குமார் - கலாவதி தம்பதி. அவரது மகள் நவ்யாவிற்கும், ஸ்ரீ ஹர்ஷா என்பவருக்கும் திருமணம் நடந்தது.

ஆடி மாதம் என்பதால் நவ்யா தனது தாய் வீட்டிற்கு வந்து இருந்தார். ஆடி மாதம் முடிந்ததால் ஸ்ரீஹர்ஷா மனைவியை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல நேற்று மாமியார் வீட்டிற்கு வந்தார்.

மருமகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க மாமியார் வீட்டினர் தடல் புடலான ஏற்பாடுகளை செய்தனர். அதன்படி, வீட்டுக்கு வெளியில் இருந்து பூக்களால் ஒவ்வொரு அடிக்கும் இதயப்பூர்வமாக வரவேற்றனர். புது மாப்பிள்ளை ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போது வெள்ளி சாமி சிலை பணமுடிப்பு உள்ளிட்ட பரிசுகளை வழங்கினர்.

பின்னர் மருமகனின் கண்ணைக் கட்டி மேசைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருமகனின் கண்ணில் கட்டப்பட்டிருந்த துணியை அகற்றினர். மேஜையில் அடிக்கி வைக்கப்பட்டு இருந்த உணவுப் பொருட்களைக் கண்டு ஸ்ரீஹர்ஷா திக்குமுக்காடி போனார்.

மேஜையில் இட்லி வடை, பூரி, பொங்கல், உப்புமா மற்றும் இனிப்பு வகைகள் என 100-க்கும் மேற்பட்ட உணவுகளை அடுக்கி வைத்திருந்தனர்.

மாமனார், மாமியார், மனைவி ஆகியோர் ஸ்ரீஹர்ஷாவுக்கு உணவுகளை ஊட்டி விட்டனர்.

இதுபோல் மாமனார் மாமியார் மனைவி கிடைப்பதற்கு பாக்கியம் செய்து இருக்க வேண்டும் என ஸ்ரீஹர்ஷா தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com