ஓடும் 'பைக்'கில் முத்த மழை பொழிந்த காதல் ஜோடி

வீதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இளம்பெண்ணை முத்தமிட்டு கொண்டு வாகனம் ஓட்டிய காட்சிகள் பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஓடும் 'பைக்'கில் முத்த மழை பொழிந்த காதல் ஜோடி
Published on

நாட்டின் முக்கிய நகரங்களில் போக்குவரத்து நிறைந்த சாலைகளில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டு போக்குவரத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதன் மூலம் வீதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராஜஸ்தானில் ஜெய்பூரில் ஒரு இளம்ஜோடி ஓடும் பைக்கில் முத்தமழை பொழிந்த சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. அதில் ஒரு வாலிபர் பைக் ஓட்டுகிறார். அவர் சாலையை பார்க்காமல் தனக்கு பின்னால் அமர்ந்திருந்த இளம்பெண்ணை முத்தமிட்டு கொண்டு வாகனம் ஓட்டிய காட்சிகள் பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அந்த ஜோடி ஹெல்மெட்டும் அணிந்திருக்கவில்லை. இந்த வீடியோ வைரலானதை அடுத்து போக்குவரத்து போலீசார் அந்த பைக்கின் எண் மூலம் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வாலிபர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com