மனைவியின் தலையை துண்டித்து காளி கோவிலுக்கு எடுத்துச் சென்று மடியில் வைத்து அமர்ந்த கணவன்

இரண்டு மகன்களும் அருகிலேயே அமர்ந்திருந்தனர்.
 ரிண்டு கோஷ்
Published on: 
Summary

மேற்கு வங்கத்தில் மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் கணவன் காலி கோவிலில் அமர்ந்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டம் கங்காராம்பூர் நகரின் நாராயண்பூர் பகுதியை சேர்ந்தவர் ரிண்டு கோஷ். இவரது மனைவி சீமா சர்க்கார் (36).

அதிர்ச்சி

இவர் நேற்று அங்குள்ள காளி கோவில் ஒன்றில் மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையை மடியில் வைத்தவாறும் அருகில் கதியுடனும் இருந்துள்ளார். அவரது இரண்டு மகன்களும் அருகிலேயே அமர்ந்திருந்தனர்.

அவரை அந்த கோலத்தில் கண்ட கோவிலுக்கு வந்த உள்ளுர்வாசிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்கள் உடனே காவல்த்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

கங்காரம்பூர் காவல் நிலையப் பொறுப்பாளர் பூர்ணேந்து குண்டு தலைமையிலான போலீஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரிண்டு கோஷைக் கைது செய்தனர். மனைவி சீமா ஹைதரின் தலையை மீட்டனர்.

ரிண்டு கோஷ் வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கு சீமாவின் தலையற்ற உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஏன்?

ரிண்டு கோஷ் உடைய உறவினர் ராஜேஷ் பிரமாணிக்கின் கூற்றுப்படி, பேருந்து நடத்துனர் வேலையை இழந்த பிறகு, கோஷ் பொருளாதார நெருக்கடியை சந்தித்தார். அவர் சிறு தொழில்களை முயன்றும் நிலையான வருமானம் ஈட்ட முடியவில்லை.

சமீப காலங்களில் கோஷின் வாழ்க்கை முறை கணிசமாக மாறியது. அவர் இறைச்சி உண்பதை முற்றிலுமாகத் துறந்து, முழுமையான சைவ உணவு உண்பவராக மாறினார். தாந்திரீகத்தில் நாட்டம் உடையவராக அவரின் செயல்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தன் வேலை பறிபோனதில் இருந்து தான் சைக்கோவாக மாறிவிட்டதாக ரிண்டு கோஷ் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

X