டெல்லி சட்டசபை தேர்தல்: 981 வேட்பாளர்கள் போட்டி

டெல்லி சட்டசபை தேர்தல் களத்தில் 981 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பு மனுக்களை வாபஸ் பெற 20-ம் தேதி கடைசி நாளாகும்.
டெல்லி சட்டசபை தேர்தல்: 981 வேட்பாளர்கள் போட்டி
Published on

புதுடெல்லி:

டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு இதுவரை 981 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர் என டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதன்படி, மொத்தம் 1,521 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வேட்பு மனுக்களை வாபஸ் பெற 20-ம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய இறுதி நாளான நேற்று ஒரே நாளில் 680 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. புதுடெல்லி தொகுதியில் அதிக அளவாக மொத்தம் 29 வேட்பாளர்கள் 40 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த தொகுதியில், ஆம் ஆத்மி கட்சி தலைவர் மற்றும் முன்னாள் முதல் மந்திரியான கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பா.ஜ.க. சார்பில், முன்னாள் எம்.பி. பர்வேஷ் வர்மாவும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித் மகன் சந்தீப் தீட்சித்தும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com