மிசோரமில் சோகம் - கல்குவாரி விபத்தில் சிக்கி 8 தொழிலாளர்கள் பலி

மிசோரம் கல்குவாரியில் கற்கள் சரிந்து விழுந்ததில் 12 தொழிலாளர்கள் சிக்கினர். விபத்தில் சிக்கி உயிரிழந்த 8 தொழிலாளர்களின் உடல்கள் இன்று மீட்கப்பட்டன.
குவாரி விபத்து
குவாரி விபத்து
Published on

அய்ஸ்வால்:

மிசோரமில் நத்தியால் மாவட்டத்தில் மவ்தார் கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த குவாரியில் தொழிலாளர்கள் நேற்று பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது திடீரென குவாரியில் கற்கள் அதிகளவில் சரிந்து விழுந்தன. இதில் 12 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து எல்லை பாதுகாப்பு படையினர் உடனடியாக அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இன்று காலை அப்பகுதிக்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டது. மீட்புக் குழுவினர் விபத்தில் சிக்கி உயிரிழந்த 8 தொழிலாளர்களின் உடல்களை மீட்டனர்.

மேலும், காணாமல் போன 4 தொழிலாளர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com