சத்தீஸ்கரில் சரக்கு வாகனம்- லாரி மோதி விபத்து: 8 பேர் உயிரிழப்பு

குடும்ப விழாவில் பங்கேற்றுவிட்டு இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து.காயமடைந்தவர்கள் இரண்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கரில் சரக்கு வாகனம்- லாரி மோதி விபத்து: 8 பேர் உயிரிழப்பு
Published on

சத்தீஸ்கர் மாநிலம் பெமேதரா மாவட்டத்தில் சரக்கு வாகனம் லாரி மீது மோதி ஏற்பட்ட விபத்தில், 5 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் என 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 23 பேர் படுகாயமடைந்தனர்.

கதியா கிராமத்திற்கு அருகே நேற்று குடும்ப விழாவில் பங்கேற்றுவிட்டு இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்ததாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் பத்தரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் பூரி நிஷாத் (50), நீரா சாஹு (55), கீதா சாஹு (60), அக்னியா சாஹு (60), குஷ்பு சாஹு (39), மது சாஹு (5), ரிகேஷ் நிஷாத் (6) மற்றும் ட்விங்கிள் நிஷாத் ( 6) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் இரண்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 4 பேர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com