

இந்தியாவின் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5.8 கோடியைத் தாண்டியுள்ளது.
இந்தியாவின் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5.8 கோடியைத் தாண்டியுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் 7,300க்கும் மேற்பட்ட நீதிபதி பணியிடங்களும், உயர் நீதிமன்றங்களில் 300க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.
தேசிய நீதித்துறை தரவு கட்டமைப்பு மற்றும் உச்ச நீதிமன்றப் பதிவகப் தரவுகளின்படி ,
நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் 5.8 கோடிக்கும் மேல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் மத்திய, மாநில அரசுகளும் அரசு நிறுவனங்களும் தொடர்புடைய வழக்குகளே அதிகம்.
உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே 93,000 - 95,000 வழக்குகள் (18,375 உரிமையியல் வழக்குகள், 73,967 குற்றவியல் வழக்குகள்) நிலுவையில் உள்ளன.
நீதிபதிகளின் காலி இடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ நடைமுறை அதிக காலம் எடுத்துக்கொள்வதே தற்போதைய நெருக்கடிக்கு முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது.
தரவுகளின்படி, மாவட்ட நீதிமன்றங்களில் 7,300-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் கீழ் நீதிமன்றங்களில் மட்டும் 2,000-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. உயர் நீதிமன்றங்களில் 300-350 காலியிடங்கள் உள்ளன.
காலிப்பணியிடத்தை நிரப்பும் செயல்முறையில் இறுதி முடிவை எட்டுவதற்கு ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் ஆகின்றன.
ஒரு காலி இடம் நிரப்பப்படும் நேரத்தில், இரண்டு புதிய காலி இடங்கள் உருவாகின்றன.
இதற்கு தீர்வாக காலி இடம் ஏற்படுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே உயர் நீதிமன்ற கொலீஜியம் பெயர்களை பரிந்துரைக்க வேண்டும், உச்ச நீதிமன்ற கொலீஜியம் 90 நாட்களுக்குள்ளும், மத்திய அரசு 60 நாட்களுக்குள்ளும் முடிவெடுக்க வேண்டும். ஆறு மாதங்களுக்குள் நியமனம் முடிக்கப்பட வேண்டும் என்று சட்ட வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.