700 வயது.. இந்தியாவில் உள்ள உலகின் மிக வயதான ஆலமரம் பற்றி தெரியுமா?

ஆலமரங்களில் அதன் வயதை கண்டறிய உதவும் வளையங்கள் உருவாவதில்லை.
ஆலமரம்
ஆலமரம்
Published on
Summary

பீகாரில் 700 ஆண்டுகால ஆலமரம் உலகத்திலேயே தற்போதுள்ள மிக வயதான ஆலமரம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

மரங்கள் மனித வரலாறை சுமந்து நிற்கும் தூபிகள். தலைமுறைகளின் நினைவை சுமக்கும் கலன்கள்.

மரங்கள் வெவ்வேறு வகையாக மனிதனுக்கும் இயற்கை சமநிலைக்கும் உதவுகின்றன. குறிப்பாக கிராமங்களில் அவை மனிதர்களுடன் ஆழ்ந்த பிணைப்பை கொண்டுள்ளன.

பீகாரின் முங்கர் மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த ஒரு ஆலமரம் பண்டைய காலம் முதல் இருப்பதாக மக்கள் நம்பி வந்தனர்.

இந்நிலையில் அந்த மரம் 700 வருட காலம் பழமையானது என விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதன்மூலம் உலகின் மிக வயதான ஆலமரம் என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஆலமரம்

ஒரு குடும்பம் தலமைமுறை தலைமுறையாக தழைப்பதை, ஆலமரம் விழுது விடுவதற்கு ஒப்பாக பேசுவர்.

இந்தியாவில் உள்ள மரங்களில் சாதரணமாக எங்கும் தென்படுவன ஆலமரம். ஆழாமாக அகலமாக வேர் விடும் ஆலமரங்கள் அதன் விழுதுகள் மற்றும் அகன்ற தோற்றத்தின் கீழ் பலருக்கு நிழல் தருகின்றன.

இந்த தன்மையால் கிராமங்களில் மக்கள் ஒன்றுகூடுவதும் இந்த ஆலமரங்களின் கீழேயாம். அதன் கலாச்சர முக்கியத்துவம் ஒருபுறம் இருந்தாலும், ஆலமரங்களில் அதன் வயதை கண்டறிய உதவும் வளையங்கள் உருவாவதில்லை.

மரங்களின் வயதை கண்டறிய அவற்றில் உருவாகும் வளையங்களின் எண்ணிக்கையை வைத்து கணிப்பது டென்ட்ரோக்ரோனாலஜி எனும் அறிவியல் முறை ஆகும். ஆனால் ஆலமரங்களில் அவ்வாறான வளையங்கள் உருவாவதில்லை என்பதால் அதன் வயதை கணக்கிடுவது சவாலாக உள்ளது.

எப்படி சாத்தியமானது?

லக்னோவில் இயங்கி வரும் பீர்பால் சஹானி பேலோசைன்ஸ் கல்வி நிறுவனத்தில் பணிபுரியர்க் முனவைர் த்ரினா போஸிடம் பீகார் வனத்துறை ஒரு கோரிக்கையுடன் சென்றது.

மக்கள் பண்டைய காலத்தை சேர்ந்தது எனக் கருதும் அந்த ஆலமரத்தின் உண்மையான வயது என்ன என்பதை கண்டறிய ஒரு தனித்துவமான அறிவியல் முறைமை தேவையாக இருந்தது.

முனைவர் மாயங் சேகர், முனைவர் அகிலேஷ் யாதவ் உடன் இணைந்து முனைவர் த்ரினா போஸ் ஆராய்ச்சியில் இறங்கினார். அந்த மரத்தின் உள் மையத்தில் உள்ள ஆல்பா செலுலோஸ் (தாவர செல் சுவர்களில் காணப்படும்) ஐ சேகரித்த அவரின் குழு அதை ஆய்வுக்கு உட்படுத்தியது. ஏனெனில் pith எனும் உள் மையம் தான் அந்த மரம் உருவாக தொடங்கிய உயிரியல் புள்ளி. அங்கு தான் அந்த மரம் ஆரம்பத்தில் உருவாக்கிய மரக்கட்டை இருக்கும்.

இந்த மாதிரிகள் அறிவியல் ரீதியாக நவீன முறையில் ஆராயப்பட்டு அதன் வயது 700 ஆக இருக்கும் கண்டறியப்பட்டது.

அந்த மரத்தில் அருகில் 300 முதல் 350 ஆண்டுகளாக பழமையான பரோ பங்களா என்ற காலனிய கால மாளிகை உள்ளது. அந்த சமயத்தில் அந்த ஆலமரம் நடப்பட்டிருக்கலாம் என்று சில ஊகங்கள் இருந்தன. ஆனால் அந்த மரம் 700 ஆண்டுகள் முந்தையது என்றும் அந்த மரத்தை ஒட்டி தான் பங்களா கட்டப்பட்டது என்பதும் தற்போது ஊர்ஜிதமாகியுள்ளது.

இந்த ஆய்வு இந்த மரத்தின் வயதை கண்டுபிடித்ததோடு நில்லாமல் உலகெங்கிலும் பழமையான மரத்தின் வயதை கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com