கேத்தன் அகர்வால் கொலை வழக்கில் 5,053 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

சேத்தன் சௌத்ரி மற்றும் ரித்தேஷ் ஹங்கே ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
Ketan Agarwal murder case
Published on

பரபரப்பான கேத்தன் அகர்வால் கொலை வழக்கில், 5053 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை புனே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புனேவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அகர்வால், ஜூன் 18-ஆம் தேதியன்று லோகட் கோட்டையில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டதில் உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து, அவரது வருங்கால மனைவி சியா கோயல், அவரது காதலன் என்று கூறப்படும் சேத்தன் சௌத்ரி மற்றும் ரித்தேஷ் ஹங்கே என அடையாளம் காணப்பட்ட மற்றொரு நபர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

குற்றப்பத்திரிகை தாக்கல்:

வட்காவ்ன் மாவல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், கைபேசி தரவுகள், அழைப்பு விவர பதிவுகள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் தொழில்நுட்ப பகுப்பாய்வு சான்றிதழ்கள் உள்ளிட்ட பல ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளன என்று புனே ஊரக காவல் அதிகாரி தெரிவித்தார்.

குற்றப்பத்திரிகையின்படி, கடந்த ஆண்டு லோகாட்டில் ஒரு பெண் உயிரிழந்த இதேபோன்ற சம்பவம் குறித்து சியா கோயல் இணையத்தில் தேடியுள்ளார்.

ராஜா ரகுவன்ஷி கொலை:

சோனம் ரகுவன்ஷி வழக்கை ஆய்வு செய்வதற்காக பல தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதும் தெரியவந்துள்ளது என்று அது கூறியது. கடந்த ஆண்டு மே மாதம் மேகாலயாவில் தம்பதியரின் தேனிலவின் போது, ​​இந்தூரை சேர்ந்த அவரது கணவர் ராஜா ரகுவன்ஷி கொலை செய்யப்பட்டதை அடுத்து சோனம் கைது செய்யப்பட்டார்.

ராஜா கடந்த ஆண்டு மே 23 அன்று காணாமல் போயிருந்தார். சில நாட்களுக்குப் பிறகு, ஜூன் 2 அன்று வடகிழக்கு மாநிலத்தின் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சிக்கு அருகில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கு தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com