உலகளவில் சிறந்த பள்ளிக்கூடம் எது?: தேர்வு பட்டியலில் தமிழ்நாடு உள்பட இந்தியாவின் 5 பள்ளிகள்

உலகளவில் சிறந்த பள்ளிக்கூடம் எது?: தேர்வு பட்டியலில் தமிழ்நாடு உள்பட இந்தியாவின் 5 பள்ளிகள்

மத்திய பிரதேச மாநிலத்தின் இரண்டு பள்ளிகள் தேர்வு பட்டியலில் இடம் பிடித்துள்ளது.மும்பை, டெல்லி மற்றும் தமிழ்நாட்டி தலா ஒரு பள்ளி இடம் பிடித்துள்ளது.
Published on

இங்கிலாந்தை சேர்ந்த அமைப்பு ஒன்று உலகளவில் சமுதாய வளர்ச்சிக்கு மிகச்சிறந்த வகையில் கல்வி கற்றுக்கொடுக்கும் பள்ளிகளை தேர்வு செய்து பரிசளித்து வருகிறது.

சமூக ஒத்துழைப்பு, சுற்றுச்சூழல் நடவடிக்கை, புதுமை, துன்பங்களை சமாளித்தல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆதரவு ஆகிய ஐந்து பிரிவுகளில் ஒரு பிரிவிற்கு 10 பள்ளிகளை தேர்வு செய்து அதில் சிறந்த பள்ளிக்கு முதல் பரிசு வழங்கும். முதல் பரிசு 50 ஆயிரம் அமெரிக்கா டாலர் பகிர்ந்து அளிக்கப்படும்.

ஒவ்வொரு பிரிவிலும் உலகளவில் இருந்து தலா 10 பள்ளிகளை தேர்வு செய்துள்ளது. இதில் ஐந்து பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்படும்.

இதில் இந்தியாவை சேர்ந்த ஐந்து பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பள்ளிகள் டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து தலா ஒரு பள்ளிகள் தேர்வாகியுள்ளன.

தமிழ்நாடு

கல்வி இன்டர்நேசனல் பப்ளிக் ஸ்கூல் (Kalvi International Public School (Madurai). சமூக ஒத்துழைப்பு பிரிவில் 10 பள்ளிகளில் ஒரு பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் இருந்து சிறந்த பள்ளி தேர்வு செய்யப்படும். இது ஒரு தனியார் பள்ளிக்கூடம் ஆகும். கல்வி மற்றும் விளையாட்டு மூலம் பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை மாற்றுதல். பின்தங்கிய நிலையில் மாணவர்களை சிறந்த விளங்க உதவுதல் காரணத்திற்கான இந்த பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம்

அரசு சிஎம் ரைஸ் மாடல் உயர்நிலைப் பள்ளி (Government CM RISE Model HSS, Jhabua), ஜி.ஹெச்.எஸ்.எஸ். வினோபா (அம்பேத்கர் நகர் (G H S S Vinoba Ambedakar Nagar, Ratlam)

டெல்லி

ரியான் இன்டர்நேசனல் ஸ்கூல் (Ryan International School, Vasant Kunj)

மும்பை

மும்பை பப்ளிக் ஸ்கூல் எல்.கே. வாக்ஜி இன்டர்நேஷனல் (Mumbai Public School L K Waghji International (IGCSE)

X

Maalai Malar
www.maalaimalar.com