

தெலுங்கானாவில் தனியார் பள்ளியில் படிக்கட்டுகளில் இருந்து இடறி விழுந்து 4ஆம் வகுப்பு சிறுமி உயிரிழந்த அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.
அங்குள்ள இந்தியன் ஹைட்ஸ் என்ற தனியார் பள்ளியில் 4 வகுப்பு படித்து வந்த வர்னிகா என்ற 12 வயது சிறுமி பள்ளி படிக்கட்டில் வந்துகொண்டிருந்தபோது கால் இடறி கீழே விழுந்திருக்கிறாள்.
இதில் சிறுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக வர்னிகாவை பள்ளி ஊழியர்களும் தலைமை ஆசிரியரும் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.
அங்கு சிச்சை அளிக்கப்பட்டபோதும் உடல்நிலையில் முன்னேற்றம் இன்றி நேற்று சிறுமி பரிதமாக உயிரிழந்தாள்.
சிறுமி பள்ளிப் படிக்கட்டுகளில் இருந்து இடறி விழுந்த சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
அதில் சிறுமி படிக்கட்டுகளில் இறங்கி கீழே வந்துகொண்டிருப்பதும் எதிர்பாராத கணத்தில் கால் இடறி தலைகுப்புற கீழே விழுவதும் அவளுக்கு மற்ற மாணவர்கள் உதவ முனைவதும், அதில் ஒரு மாணவன் ஆசியாரை அழைப்பதும் ஆசிரியர் அங்கு வந்து சிறுமியின் நிலையை சோதிப்பதும் இடம்பெற்றுள்ளது
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சம்பவத்தின் தன்மை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை இந்த சம்பவத்தில் புகார் ஏதும் வழங்கப்படவில்லை.
சிறுமிக்கு ஏற்கனவே உடல்நலக்கோளாறு இருந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அதேநேரம் சிறுமி விழுந்தது குறித்து பள்ளி நிர்வாகம் தங்களிடம் சரியான நேரத்தில் தகவல் அளிக்கவில்லை என பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.
தகவல் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் தான் தங்கள் குழந்தைக்கு உரிய மருத்துவ சிகிச்சையை கிடைக்க செய்ய முடியாமல் போனது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் பள்ளி நிர்வாகம் இதனை மறுத்துள்ளது. உரிய நேரத்தில் சிறுமி அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்தாக தெரிவித்துள்ளது.