

இந்தியா கூட்டணி நடத்திய பேரணி படுதோல்வி உற்றதாக பாஜக விமர்சித்துள்ளது.
டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி பேரணியில் 10 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மைதானத்தின் சுமார் 40 சதவீதம் காலியாக இருந்ததாக பாஜக தெரிவித்துள்ளது .
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இந்தியா கூட்டணி டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் இன்று பேரணியை நடத்தியது.
ராம் லீலா மைதானம் நோக்கி தலைவர்கள் பேரணி சென்று அங்கு உரையாற்றினர்.
ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், பரூக் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி, சஞ்சய் ராவத், சுப்ரியா சுலே, முதலமைச்சர்கள் வி.டி. சதீசன், ரேவந்த் ரெட்டி, டி.கே. சிவகுமார் மற்றும் பிற தலைவர்களும் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.
டெல்லியில் செய்தியாளர் சந்திப்பு நடத்திய பாஜக எம்.பி. சம்பித் பத்ரா, பேரணியின் புகைப்படங்களை காண்பித்து, ராம்லீலா மைதானத்தில் மொத்தம் 28,000 நாற்காலிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இவற்றில், பிற்பகல் 3:30 மணி முதல் 4:00 மணி வரை சுமார் 5,000 முதல் 7,000 வரையிலான நாற்காலிகள் காலியாக இருந்தன. மைதானத்தின் சுமார் 40 சதவீதம் காலியாக காணப்பட்டன. இந்தியா கூட்டணியின் பேரணி படுதோல்வி (சூப்பர் பிளாப்) ஆகியுள்ளது என தெரிவித்தார்
முன்னதாக பேரணியில் உரையாற்றிய ராகுல் காந்தி, "தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தேசத்தின் குரலை அடக்க முயற்சிப்பதாகவும், ஒரு பெரும் குற்றத்தைச் செய்துள்ளதாகவும் கூறினார்.
ஞானேஷ் குமார் பதவிநீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்றும் அவரை தொடர்ந்து மோடியும் அமித் ஷாவும் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவார்கள் என ராகுல் காந்தி உறுதியளித்தார்.
அரசியலமைப்புச் சட்டத்தையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதற்கான இந்தியா கூட்டணியின் போராட்டத்தை தொடரப்போவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.