சுங்க சாவடியில் கார் மீது லாரி மோதி 4 பேர் பலி

காரின் இடிப்பாடுகளில் சிக்கி இறந்து கிடந்தவர்களின் பிணங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சுங்க சாவடியில் கார் மீது லாரி மோதி 4 பேர் பலி
Published on: 
Summary

உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வந்த ஒரே கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் விபத்தில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் செருக்கும் பாலேனியை சேர்ந்த சாய்குமார், கோட்டா காமேஸ்வரம்மா உள்ளிட்டோர் பெங்களூரில் கூலி தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக அவர்கள் நேற்று இரவு காரில் புறப்பட்டு வந்தனர். இன்று அதிகாலை பிரகாசம் மாவட்டம், தங்கூரு சுங்கசாவடிக்கு கார் வந்தது. சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்துவதற்காக பயணிகள் பஸ் ஒன்று முன்னால் நின்று கொண்டிருந்தது. அதன் பின்னால் கார் நின்றது.

விபத்து

அப்போது அதிவேகமாக வந்த லாரி ஒன்று கார் மீது மோதியது. இதில் கார் பஸ்சுக்கும் லாரிக்கும் இடையில் சிக்கி நொறுங்கியது.

காரில் இருந்த சாய்குமார், கோட்டா காமேஸ்வரம்மா, அடையாளம் தெரியாத மற்றொருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசிங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த மற்றொரு பெண்ணை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.

போலீசார் விசாரணை

காரில் இருந்த 15 வயது சிறுவன் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காரின் இடிப்பாடுகளில் சிக்கி இறந்து கிடந்தவர்களின் பிணங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வந்த ஒரே கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் விபத்தில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

X