பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள் சிறை: கேரள முதல்வர் சதீசன் எச்சரிக்கை

இதேபோன்று 2024ம் ஆண்டும் கேரள சட்டப்பேரவையில் ஒரு மசோதா கொண்டு வரப்பட்டது.
பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள் சிறை: கேரள முதல்வர் சதீசன் எச்சரிக்கை
Published on: 

பெற்றோரின் சொத்துகளை அபகரித்துக்கொண்டு அவர்களை பராமரிக்கத் தவறும் அல்லது துன்புறுத்தும் பிள்ளைகளுக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என கேரளம் முதல்வர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.

கொல்லம் மாவட்டம் பத்தனாபுரத்தில் உள்ள காந்தி பவனில் ரூ.20 கோடி செலவில் கட்டப்பட்ட, முதியவர்களுக்கான அதிநவீன குடியிருப்பு வளாகமான பித்ருமந்திரத்தை திறந்து வைத்தபின் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

“நீங்கள் அனைவரும் கவலைப்பட வேண்டாம். பெற்றோரின் சொத்துக்கள் அனைத்தையும் அபகரித்த பிறகு அவர்களைப் புறக்கணிக்கும் பிள்ளைகளுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கும் ஒரு சட்டப்பிரிவை நான் சட்டத்தில் சேர்த்துள்ளேன்,” என்று சதீசன் கூறினார்.

மூத்த குடிமக்கள் (பராமரிப்பு மற்றும் உரிமைகள் பாதுகாப்பு) மசோதா 2026 கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் சட்டமாக மாறும்.

இந்த மசோதாவின்படி, உடல், மன, உணர்ச்சி மற்றும் நிதி ரீதியான துன்புறுத்தல்களையும், அத்துடன் ஒரு முதியவரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறுதல் மற்றும் புறக்கணித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

X