மணிப்பூரில் 3 பேர் சுட்டுக் கொலை.. சடலங்களை முதலமைச்சர் இல்லம் முன் வைத்து மக்கள் போராட்டம்

போராட்டக்காரர்களை கலைப்பதற்காக காவல்துறையினர் பல கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர்.
சடலங்களை முதலமைச்சர் இல்லம் முன் வைத்து மக்கள் போராட்டம்
Published on: 
Summary

மணிப்பூரில் விறகு சேகரித்துக் கொண்டிருந்த மூன்று பேர், திங்களன்று கிளர்ச்சியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து உள்ளூர் மக்கள் இரண்டு உடல்களை முதலமைச்சர் இல்லத்திற்கு வெளியே வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணிப்பூரில் இம்பால் கிழக்கு மற்றும் காங்போக்பி மாவட்டங்களின் எல்லையில் காலை 7 மணிக்கு மொத்தம் 16 பேர் விறகு சேகரிக்க மலைப்பகுதிக்கு சென்றபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.

உயிரிழப்பு

இதில் அருபம் ரோனில் (35) மற்றும் லைரன்லக்பாம் இனாபி (51) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதே நேரத்தில் க்ஷேத்ரிமயும் சுஷில் (32) எனபவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காயமடைந்தவர்களான என். சூரஜ் (19), மெய்ஸ்நாம் சோமேந்திரவாவ் (53) மற்றும் கே. போசன் (45) ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போராட்டம்

இதையடுத்து உள்ளூர் மக்கள் மற்றும் உறவினர்கள் சடலங்களைத் தலைநகருக்குக் கொண்டு வந்து முதலமைச்சர் ஒய். கேம்சந்த் சிங் இல்லத்தின் பிரதான வாயிலுக்கு வெளியே வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்போது முதலமைச்சர் இல்லத்தில் இருந்தாரா என்பது தெரியவில்லை.

போராட்டக்காரர்களை கலைப்பதற்காக காவல்துறையினர் பல கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர்.

அதனைத் தொடர்ந்து, சடலங்கள் ஜவஹர்லால் நேரு மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

முதலமைச்சர் இல்லத்திலும், அதனைச் சென்றடையும் சாலைகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இம்பால் முழுவதும் சந்தைகளும் கடைகளும் மூடப்பட்டிருந்தன.

போராட்டத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர் கேம்சந்த் சிங் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காயமடைந்தவர்களைப் பார்வையிட்டார். ஆனால் ஊடகங்களின் எந்தக் கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com